டேன் பிரியசாத் கொலை வழக்கு: பிரதான சந்தேக நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
டான் பிரியசாத் (Dan Priyasad) சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை வரும் 30 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த சந்தேக நபர் கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (25.04.2025) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
டேன் பிரியசாத் கடந்த 22 ஆம் திகதி இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
நீதிமன்ற உத்தரவு
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபராகக் கருதப்படும் துலான் மதுசங்க எனப்படும் துலா என்பவர் மிரிஹான விசேட விசாரணை பிரிவினரால் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷண கெக்குணவல முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
