கட்சி உறுப்பினர்களை அவசர கலந்துரையாடலுக்கு அழைத்த மைத்திரி
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் வார இறுதியில் கொழும்புக்கு அழைக்க முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், கட்சியின் அனைத்து அமைப்புகளின் பொறுப்பாளர்களும், மிக முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வது கட்டாயம் என அனைத்து உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக
அத்துடன் எதிர்வரும் காலங்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படவுள்ளதாகவும், அதன் செயற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவின் முயற்சியின் கீழ் உருவாக்கப்படும் புதிய கூட்டணியின் செயற்பாடுகளையும் ஏப்ரல் மாதத்தில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய கூட்டணி தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |