கோட்டாபயவின் தவறான முடிவு: ரணிலுக்கு சவால் விடும் மைத்திரி! பரபரப்பில் அரசியல்களம்
நாடாளுமன்ற பெரும்பான்மை
அரச தலைவரின் முடிவை நிரூபிக்க, தனக்கு பெரும்பான்மை இருப்பதைக் நிரூபித்து காட்டுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்துள்ளார்.
பெரும்பான்மை பலமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவால் வெற்றிடமான பதவியை ஏற்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் கோட்டாபய ராஜபக்ச அரசியலமைப்பை மீறியதாக மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட அரசியல் பேச்சு நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முறையான அரசாங்கம் அமைந்தால் மட்டுமே இலங்கைக்கு உதவி
மேலும் அரச தலைவர் எடுத்த அனைத்து முடிவுகளும் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தற்போதை நிர்வாகத்தை பதவி விலக வேண்டும் என்றும், தேர்தல் நடக்கும் வரையில் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் சர்வகட்சி அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறது.
தாம் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்திய பல வெளிநாட்டுத் தூதுவர்கள், முறையான அரசாங்கம் அமைந்தால் மட்டுமே இலங்கைக்கு உதவி வழங்க முடியும் என தெரிவித்ததாகவும் மைத்திரிபால சிறிசேன கூறினார்.
பொதுத் தேர்தல்
அவர்கள் இடைக்கால அரசாங்கத்தையோ அல்லது ஒன்றிணைந்த ஆட்சிகளையோ கையாள விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். ஆக்கபூர்வமான மாற்றங்கள் ஏற்படும் வரை அரசியல் நிலைமைகளை தொடர்ந்து அவதானிப்பதாக தூதுவர்கள் அறிவித்துள்ளனர்.
அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். ஆகையினால் இந்த குழப்பத்தில் இருந்து விடுபட ஒரே வழி பொதுத் தேர்தலை நடத்துவதுதான் என்று மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.