தென்கொரியாவில் குடியேறுகிறாரா மைத்திரி..!
Maithripala Sirisena
Sri Lanka
South Korea
By Eunice Ruth
தென்கொரியாவில் தான் குடியேறப்போவதில்லை என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து தான் வெளியேறி, வேறோரு நாட்டில் குடியேறப்போவதாக போலி செய்திகள் வெளியாகி வரும் பின்னணியிலேயே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
போலி பிரச்சாரங்கள்
சிலர் தவறான அரசியல் நோக்கங்களுக்காக இவ்வாறான போலி பிரச்சாரங்களை மேற்கொள்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தான் இலங்கையிலேயே இருக்கப்போவதாகவும், தென்கொரியா மாத்திரமின்றி வேறு எந்த நாட்டிலும் குடியேறப் போவதில்லை எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறிலங்கா சுதந்திர கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியிலும், கட்சியின் மே தினக்கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்