அமைச்சுப்பதவியை ஏற்கவில்லை - முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அறிவிப்பு
report
maithiripala sirisena
ministry post
By Jaso
தனக்கு அமைச்சர் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தியை முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன, மறுத்துள்ளார்.
ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், அவ்வாறான எந்தவிதமான கோரிக்கையையும் அரசாங்கத்திடம் தான் முன்வைக்கவில்லை, அது தவறானது. அமைச்சர் பதவி மட்டுமன்றி, அரசாங்கத்திடம் எந்தவொரு பதவியையும் தான் கோரவில்லை என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாத நடுப்பகுதியில் அமைச்சரவையில் மாற்றமொன்று செய்யப்படவிருப்பதாக தகவல்கள் கசிந்திருந்தன. இந்நிலையிலேயே, முன்னாள் ஜனாதிபதிக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படலாமென அந்தத் தகவல்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி