சஜித்துடன் இணைந்த மைத்திரி: வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena), ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்துள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் (Saidulla Marikkar) விடுத்துள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரியுடன் இணைவதற்கோ அல்லது அவ்வாறான ஆதரவைப் பெறுவதற்கோ ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு இந்த தேவையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாார்.
மன்னார் வைத்தியசாலை தொடர்பில் அக்கறையின்றி செயற்படும் முன்னாள் அமைச்சர் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டு
வேண்டுகோள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக தோல்வியை எதிர்நோக்கவுள்ள அரச சார்பு பிரசாரக் குழுக்கள் பொய்யான செய்திகளை உருவாக்கி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் மரிக்கார் வலியுறுத்துகின்றார்.
மேலும், இந்த தேர்தல் காலத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சவாலாக மாறியுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு எதிராக அரசு மற்றும் அரசாங்கத்துடன் ஒப்பந்த அரசியலில் ஈடுபட்டுள்ள அனைத்து வேட்பாளர்களினதும் ஊடக செயற்பாடுகள் குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |