இன்று CID செல்லும் ரணிலின் மனைவி மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்ரி விக்ரமசிங்க இன்று (20) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி குற்ற விசாரணை பிரிவுக்கு முன்னிலையாகவுள்ளார்.
இன்றைய தினம் அவரை நிதி குற்றப் விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, கடந்த 18ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.
அதன்படி, அவர் இன்றைய தினம் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக, வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்து கொள்வதற்காகவே மைத்ரி விக்ரமசிங்கவுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியது.
அதன்படி, கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார, சமன் ஏகநாயக்கவை தலா 2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |