சிக்குவாரா மைத்திரி? ஜனவரியில் வருகிறது முக்கிய தீரப்பு
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 128 மனுக்களை நிராகரிக்குமாறு முன்னாள் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) விடுத்த கோரிக்கை மீதான உத்தரவு அடுத்த வருடம் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என கொழும்பு மாவட்ட நீதிபதி சத்துரிக்கா டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், நிரந்தர ஊனமுற்றோர் மற்றும் காயமடைந்தவர்கள் தங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி அவர்களது உறவினர்கள் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தால், முன்னாள் அரச தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அரச தலைவரின் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா(Faizer Mustafa) தெரிவித்துள்ளார்.
எனினும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்துள்ளதால் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேரா(Shamil Perera) தெரிவித்தார்.