“தேசிய அரசாங்கமில்லை வேறு எது வந்தாலும்”- மைத்திரிபால சிறிசேன
தேசிய அரசாங்கமில்லை வேறு எது வந்தாலும் முதலில் அரசாங்கத்தினுடைய செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் இது தொடர்பாக தெரிவிக்கையில்,
அண்மையில் இரண்டு அரசாங்க அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டு, உடனடியாக அவர்களுக்குப் பதிலாக வேறு நபர்கள் நியமிக்கப்பட்டனர். தேசிய அரசாங்கம் பற்றி தற்பொழுது பேசப்படுகின்றது. எந்த அரசாங்கம் வந்தாலும் செலவுகள் குறைக்கப்பட வேண்டும்.
ஒரு அமைச்சுக்கு மூன்று இராஜாங்க அமைச்சுக்கள், சிலவற்றில் நான்கு பேர் இராஜாங்க அமைச்சர்கள், ஒருவரை ஒருவர் வேலை செய்ய விடாமல் கயிறு இழுக்கின்றனர். ஆகவே அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் மிகவும் அவசியமானது.
விரிவான அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்படும். இதில் யார் தலைவர், யார் அரச அதிபர் வேட்பாளர் என்பது பற்றி பேசப்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நீதிக்காகக் காத்திருக்கும் ஈழத் தமிழினம்… சர்வதேச நீதி தினம்… 10 மணி நேரம் முன்