மொட்டுக்கு மற்றுமொரு அதிர்ச்சி வைத்தியம் - மைத்திரி -விமல் இரகசிய சந்திப்பு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்சவுக்கும் இடையில் இரகசியமான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்துக்கும் அரசாங்க பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ள நிலையிலேயே இவ்வாறு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.
ஏற்கனவே சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அண்மையில் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.
இந்த சந்திப்பு சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இதில் மைத்திரிபால உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்வாறு சந்திப்பு நடந்தமை ஆளும் பொதுஜனபெரமுனவுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது மைத்திரி- விமல் இரகசிய சந்திப்பு தொடர்பான தகவல் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.