பிரித்தானியாவில் ஆடம்பர ஹோட்டலை கொள்வனவு செய்த இலங்கை நிறுவனம்
பிரித்தானியா (united kindom) - டெர்பியில் உள்ள பிரதான ஆடம்பர ஹோட்டல் ஒன்று இலங்கை (srilanka) நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
செயின்ட் மேரிஸ் கேட்டில் உள்ள தரம் வாய்ந்த இந்த ஹோட்டலை, டெடிகம குழுமத்தின் ரஸ்மி டெடிகம மற்றும் பீட்டர் கரன் ஆகியோர் வெளியிடப்படாத தொகைக்கு கொள்வனவு செய்துள்ளனர்.
டெடிகம குழுமம் (Dedigama Group) நிதிச் சேவைகள், நகைகள், இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஏற்றுமதி, ரியல் எஸ்டேட் மற்றும் தோட்டங்கள் ஆகியவற்றிலும் நிபுணத்துவம் பெற்றுள்ள ஓர் நிறுவனமாகும்.
இலங்கையை தளமாகக் கொண்ட தாய் நிறுவனம்
இந்த ஹோட்டலில் 38 தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட படுக்கையறைகள் உள்ளன. இது ஒரு விக்டோரியன் (Victorian) சொத்து ஆகும், இது முன்பு ஒரு காவல் நிலையமாகவும், நகரசபை தலைமையகமாகவும் செயற்பட்டது.
இலங்கையைத் தளமாகக் கொண்ட தாய் நிறுவனத்துடன் 2005 ஆம் ஆண்டு முதல் எட்டு ஹோட்டல்களைக் கொள்வனவு செய்துள்ள Lavendish Leisure நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்பட்ட இரண்டாவது பிரித்தானிய ஹோட்டல் இதுவாகும்.
2010 ஆம் ஆண்டு மறைந்த மகாராணி இரண்டாவது எலிசபெத் இந்த ஹோட்டலில் உணவருந்திய போது அதன் தலைமை சமையல்காரருக்கு தமது தனிப்பட்ட நன்றியை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |