அம்பாறையில் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது!
அம்பாறையில் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (22-11-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை தலைமையக காவல் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 2320 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேகநபர் கல்முனை குடி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் கடந்த காலங்களில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சட்டநடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த சந்தேகநபரின் உதவியாளர்களாகச் செயற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள், போதைப்பொருள் விற்பனை நடவடிக்கைகளுக்கு பிரதான சந்தேகநபருக்கு உதவியதுடன் அவர்கள் வசம் இருந்தும் ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் சாய்ந்தமருது காவல்துறையினர் மேலதிகவிசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |