யாழில் நள்ளிரவு 12 மணி வரை திறக்கப்பட்ட பலாலி வீதி : வெளியான முக்கிய அறிவிப்பு
யாழ்ப்பாணம், வசாவிளான் சந்தியிலிருந்து பருத்தித்துறை - பொன்னாலை வீதி வரையான பலாலி வீதி திறக்கப்படும் நேரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, குறித்த வீதியானது நேற்று (22) முதல் நள்ளிரவு 12 மணி வரை பொதுமக்களின் போக்குவரத்துக்காகத் திறந்து விடப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது.
இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான குறித்த வீதி கடந்த வருடம் நேர கட்டுப்பாட்டுடன் திறக்கப்பட்ட நிலையில் இதுவரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பொதுமக்களின் போக்குவரத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடன் பிடித்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம்: சரத் பொன்சேகா வாக்குமூலம்
நிபந்தனைகளுடன் திறக்கப்பட்ட வீதி
இந்தநிலையில் யாழ்.வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை – பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் மக்கள் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது.

குறித்த வீதி ஊடாக காலை 06 மணி முதல் மாலை 09 மணி வரை மாத்திரமே மக்கள் பயணிக்க முடியும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
உயர் பாதுகாப்பு வலயம் ஊடாக செல்லும் குறித்த வீதியின் 2 கிலோ மீற்றர் தூர வீதியில் நடந்து செல்வதற்கோ , துவிச்சக்கர வண்டியில் செல்வதற்கோ அனுமதி இல்லை என்பதுடன் , வீதியில் வாகனங்களை தரித்து நிற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வீதியில் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை முதல் நள்ளிரவு 12.00 மணி வரை பொதுமக்கள் பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |