நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான போலி வைத்தியர்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Ministry of Health Sri Lanka Doctors
By Shalini Balachandran Nov 23, 2026 04:54 AM GMT
Report

நாடளாவிய ரீதியில் சுமார் நாற்பதாயிரம் போலி வைத்தியர்கள் இருப்பதாக சமுதாய சுகாதார விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், இதற்கு சுகாதார அமைச்சின் தனியார் மருத்துவ சேவைகள் ஒழுங்குமுறை கட்டமைப்பு வீழ்ச்சியடைந்தமையே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்தியர் சமல் சஞ்சீவ இதனை தெரிவித்துள்ளார்.

யாழ். நெல்லியடியில் மாவீரர் கொடிகளை அகற்றுமாறு காவல்துறையினர் அழுத்தம்

யாழ். நெல்லியடியில் மாவீரர் கொடிகளை அகற்றுமாறு காவல்துறையினர் அழுத்தம்

சுற்றிவளைக்கும் நடவடிக்கை

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

தற்போது தனியார் மருத்துவ நிலையங்களைச் சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் மற்றும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளிடம் (MOH) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும், இச்சுற்றிவளைப்புகளில் ஈடுபடுவதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள வைத்தியர்களே தமது தனியார் மருத்துவ நிலையங்களை சுகாதார அமைச்சில் பதிவு செய்யாத சூழ்நிலையில் போலி வைத்தியர்களின் மருத்துவ நிலையங்களைச் சுற்றிவளைப்பதில் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான போலி வைத்தியர்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Union Blames Health Ministry For Fake Doctors

தனியார் மருத்துவ நிலையங்கள் மற்றும் தனியார் வைத்தியசாலைகளின் ஒழுங்குமுறைப்படுத்தல் தொடர்பில் தற்போது நோயாளிகளிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இது குறித்து சுகாதார அமைச்சு மௌனப் போக்கைக் கடைப்பிடிப்பது கவலைக்குரிய விடயம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதேசங்களில் தகுதியின்றி நோயாளர்களுக்குச் சிகிச்சையளிக்கும் நபர்கள் யார் என்பதை சுகாதார வைத்திய அதிகாரிகள் நன்கு அறிவர் என்றும், அவ்வாறான சூழ்நிலையிலும் அவர்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாதிருப்பதற்கு தனியார் சுகாதார நிலையங்களுக்கான அரசாங்கத்தின் ஒழுங்குமுறைப்படுத்தல் பொறிமுறை சுகாதார அமைச்சின் உரிய கண்காணிப்பின் கீழ் செயற்படாமையே காரணம் எனவும் சமல் சஞ்சீவ மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் தின பதாகைகள் அகற்றம்

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் தின பதாகைகள் அகற்றம்

41 சிறுவர்களின் எலும்புக்கூடுகள்: ராஜ் சோமதேவவின் செம்மணி அறிக்கை..! நாடாளுமன்றில் அமைச்சரின் அறிவிப்பு

41 சிறுவர்களின் எலும்புக்கூடுகள்: ராஜ் சோமதேவவின் செம்மணி அறிக்கை..! நாடாளுமன்றில் அமைச்சரின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026