இலங்கை இராணுவத்திற்கு அமெரிக்கா வழங்கவுள்ள முக்கிய ஆதரவு
இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு இந்தியாவும் அமெரிக்காவும் அளித்து வரும் ஆதரவு குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) நன்றி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (18) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
அதன்படி, இந்தியா 70 ஜீப்களையும் பல்வேறு தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்
அத்துடன் ஆயுதப்படைகளின் திறன் நிலைகளை மேம்படுத்த ஒரு தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை நிறுவுவதற்கு இந்தியா ஆதரவளிக்க முன்மொழிந்துள்ளதாக தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 10 TH57 உலங்குவானூர்திகளை பரிசாக வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளதாக கூறினார்.
மேலும், அமெரிக்காவும் அவுஸ்திரேலியாவும் 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் விமானப்படைக்கு இரண்டு C-130 விமானங்களை பரிசாக வழங்கும் என தெரிவித்தார்.
இந்தநிலையில் அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியாவால் ஏற்கனவே பீச் கிராஃப்ட் விமானங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 19 மணி நேரம் முன்