மைத்திரியுடனேயே பெரும்பான்மை : மற்றவர்கள் சவால் இல்லை
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையானவர்கள் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் (Maithripala Sirisena)தொடர்ந்தும் உள்ளனர் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ரோஹன லக்ஸ்மன் பியதாச (Rohana Laxman Piyadasa) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்த குழுவொன்று பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்தாலும், அது சுதந்திரக் கட்சிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என அவர் குறிப்பிட்டார்.
சுதந்திரக் கட்சியைத் தவிர்த்து
சிறிலங்கா சுதந்திரக் கட்சியைத் தவிர்த்து ஒரு குழு புதிய கூட்டணியை ஆரம்பித்தாலும் அது அக்கட்சிக்கு சவாலாக அமையாது என அவர் தெரிவித்துள்ளார்.
மகிந்த அமரவீர தலைமையில் நடந்த கூட்டம்
இதேவேளை சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் (08) பிற்பகல் அம்பலாந்தோட்டை நகரில் நடைபெற்றது.
ஒன்றிணைந்து முன்னோக்கி செல்வோம் - நாட்டை வெல்வோம் என்ற தொனிப்பொருளில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera)வின் ஏற்பாட்டில் இந்த பேரணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |