புதுக்குடியிருப்பில் மாண்புமிகு மலையகம் நடைபவனி

Sri Lankan Tamils Sri Lanka Sri Lankan Peoples
By Beulah Aug 02, 2023 11:01 AM GMT
Report

இலங்கை வாழ் மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் மலையக மக்களின் உரிமை மற்றும் அவர்களின் மூதாதையர் விட்டு சென்ற சுவடுகள் ஊடாக பயணிப்பதை நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தலைமன்னார் முதல் மாத்தளை வரை மாண்பு மிகு மலையகம்-200 நடைபவனிக்கு வலுச்சேர்கும் வகையில் இன்றைய தினம் (02.08.2023) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இருந்து கிளிநொச்சி வரையான நடைபவனி ஆரம்பமாகியிருந்தது.

குறித்த ஆதரவுப் பயணத்தில் "மன்னார் முதல் மாத்தளை வரை" இருப்பை உறுதிப்படுத்துவோம் தோழமையை வலுப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடைபவனி காலை 9.30 மணிக்கு புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து ஆரம்பமாகியிருந்தது.

குறித்த நடைபயணத்தில் மலையக மக்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினரின் பங்குபற்றுதலோடு, மத குருக்கள், அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஊழியர்கள் மற்றும் ACG இளைஞர் அணியினர், வர்த்தக சங்கத்தினர், விழுது நிறுவன ஊழியர்கள், அமரா, சமாசம், யுகசக்தி மகளீர் சம்மேளன அங்கத்தவர்கள், முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த நடைபவனியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஆதரவை வழங்கும் விதமாக தாய்த்தமிழ் பேரவையினால் தாக சாந்தி வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மன்னார் முதல் மாத்தளை வரையான நடையணம் இச்சந்திப்பின் சந்தர்ப்பமாக அமைவதுடன் அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் ஓர் ஆதரவுப் பயணமாகவும் ஆரம்பிக்கும் இப் பயணத்தில் இலங்கையின் அர்த்தமுள்ள பிரஜைகளாகுவதற்கு மலையகத் தமிழ் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்தே ஆரம்பித்துள்ளனர்.

கோரிக்கைகள்

புதுக்குடியிருப்பில் மாண்புமிகு மலையகம் நடைபவனி | Malaiyakam 200 16 Days Walk Sl Puthukkudiyiruppu

அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளாக,

“எமது வரலாறு போராட்டம் மற்றும் பங்களிப்பினை ஏற்று அவற்றை அங்கீகரித்தல், ஏனைய பிரதான சமுகங்களுக்கு இணையான ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்ட சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் ஒரு பகுதி மக்களாக அங்கீகரித்தல்.

தேசிய சராசரிகளுடன் சமநிலையை எட்டுவதற்காக விசேட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீதான உறுதியான நடடிக்கை.

வாழ்விற்கான ஒர் ஊதியம், கண்ணியமான வேலை, தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு மற்றும் ஆண் , பெண் தொழிலாளர்களுக்கு சமமான ஊதியம், வீடமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்கான பாதுகாப்பான உரிமைகளுடனான காணி உரிமை, தமிழ் மொழிக்கு சமமான பயன்பாடு மற்றும் சம அந்தஸ்து.

அரசாங்க சேவைககளை சமமாக அணுகுவதற்கான வாய்ப்பு.

பெருந்தோட்டங்களிலுள்ள மனிதக் குடியேற்றங்களை புதிய கிராமங்களாக நிர்ணயம் செய்தல்.

வீட்டுப்பணியாளர்களின் முழுமையான பாதுகாப்பு, மலையக கலாசாரத்தை பேணுதல் மற்றும் மேம்படுத்தல்.

அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் ஆளுகையில் ஓர் அர்த்தமுள்ள வகிபங்கை வழங்கும் ஒப்புரவான மற்றும் உள்ளடங்கலான தேர்தல் முறைமை மற்றும் அதிகாரப் பகிர்வு” என்பன அமைந்துள்ளன. 

GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025