மலையக எழுச்சி பயணத்தின் 3 ஆம் நாள் நடைபயணம் மன்னாரில் நிறைவு

Sri Lankan Tamils
By Beulah Jul 30, 2023 09:27 AM GMT
Report

மலையக மக்களின் 200 வருட கால வரலாற்றை நினைவு கூறும் வகையிலும்,மலையக மக்களின் மாண்பை பறைசாற்றும் விதமாகவும் 'வேர்களை மீட்டு உரிமை வென்றிட' என்ற தொனிப்பொருளில் 'மலையக எழுச்சிப் பயணம்' என்ற மகுடத்தில் மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 16 நாள் தொடர் நடை பயணம் மக்கள் ஆதரவோடு நடைபெற்று வருகின்றது.

மூன்றாவது நாளான இன்று (30) பேசாலை வெற்றிநாயகி ஆலயத்தில் ஆரம்பமான எழுச்சிப் பயணம் மன்னாரை வந்தடைந்துள்ளது.

இன்று காலை 6.30 மணியளவில் பேசாலை வெற்றிநாயகி ஆலயத்தில் சர்வமத தலைவர்களின் ஆசியுடன் எழுச்சிப் பயணம் மன்னார் நகரை நோக்கி ஆரம்பமானது.

இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அங்கு சென்று ஆசி வழங்கிய நிலையில் மன்னார் நகர் நோக்கி அவர்களின் எழுச்சி நடை பயணம் ஆரம்பமானது.

காலை 11 மணியளவில் மன்னார் நகரை அடைந்து, மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தை சென்றடைந்தனர்.

இதன் போது மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் மற்றும் பணியாளர்கள் இணைந்து வரவேற்றனர்.

4 ஆம் நாள்

மலையக எழுச்சி பயணத்தின் 3 ஆம் நாள் நடைபயணம் மன்னாரில் நிறைவு | Malaiyakam 200 16 Days Walk Sri Lanka

நாளை திங்கட்கிழமை (31) காலை 6.30 மணியளவில் மன்னாரில் இருந்து நான்காவது நாள் பயணமாக முருங்கன் நோக்கி பயணிக்க உள்ளனர்.

16 நாள் தொடர் நடை பயணத்தின் ஆரம்ப நிகழ்வுகள் கடந்த வெள்ளிக்கிழமை (28) தலைமன்னாரில் அமைந்துள்ள புனித லோரன்ஸ் திருத்தலம் முன்பு நடைபெற்றது

அதன் தொடர்ச்சியாக இரண்டாம் நாளான நேற்று(29) காலை 6.30 மணியளவில் தலைமன்னார் புனித லோரன்ஸ் திருத்தலத்தில் இருந்து ஆரம்பமான நடைபயணம், காலை 11 மணியளவில் பேசாலை வெற்றிநாயகி தேவாலயத்தை வந்தடைந்தது.

மலையக மக்கள்,மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், ஏனைய சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், தலைமன்னார் மற்றும் பேசாலை நகரை அண்மித்து வாழும் மக்களின் பங்கேற்புடன் வெற்றிநாயகி தேவாலயத்தை வந்தடைந்த பேரணியை அத் தேவாலயத்தின் அருட்தந்தை வரவேற்றதோடு அதனைத் தொடர்ந்து வழிபாடுகள் இடம்பெற்றன.  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025