'வேர்களை மீட்டு உரிமை வென்றிட' மட்டக்களப்பில் மாபெரும் நடை பயணம்
'வேர்களை மீட்டு உரிமை வென்றிட' மட்டக்களப்பில் மாபெரும் நடை பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலையகம் 200ஆவது ஆண்டு எழுச்சி பயணம் மன்னாரியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து காந்தி பூங்கா வரையிலான எழுச்சிப் பயணம் எதிர்வரும் எட்டாம்(8) திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து காலை 07.30 மணிக்கு தொடங்கும் நடைபயணமானது மட்டக்களப்பு காந்தி பூங்காவை 11. 30 மணியளவில் வந்தடையவுள்ளது.
குறித்த நடைபயணத்தை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
மலைய மக்களின் உரிமை போராட்டத்திற்காக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்களுடைய உரிமைப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வர்த்தக சங்கங்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள், பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.