தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை நடை பயணம் - வலுக்கும் ஆதரவு

Mannar Matale
By Vanan Aug 03, 2023 12:10 PM GMT
Report

மலையக மக்களின் உரிமை மற்றும் அவர்களின் மூதாதையர் விட்டு சென்ற சுவடுகள் ஊடாக பயணிப்பதை நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தலைமன்னார் முதல் மாத்தளை வரை மாண்பு மிகு மலையகம் - 200 நடைபவனிக்கு வடக்கு கிழக்கில் இருந்து ஆதரவு கிடைக்கப்பெற்று வருகிறது.

வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட எனும் தொனிப் பொருளில் இந்த நடைபவணி இடம்பெற்று வருகிறது.

கிளிநொச்சி

தலைமன்னார் முதல் மாத்தளைவரை மாண்பு மிகு மலையகம் - 200 நடைபவனி இன்றைய தினம் கிளிநொச்சியில் இருந்து வவுனியா நகர் வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 200 ஆண்டுகளுக்கு முன் வருகை தந்த மலையக மக்கள் தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை நடை பயணமாகவே மலையகப் பகுதியில் குடியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் மலையகம்-200 ஆதரவுப் பயணத்தில் "மன்னார் முதல் மாத்தளை வரை" இருப்பை உறுதிப்படுத்துவோம் தோழமையை வலுப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடைபவனி காலை கிளிநொச்சியிலிருந்து ஆரம்பமாகியிருந்தது.

குறித்த நடைபயணத்தில் மலையக மக்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் , மத குருக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையின் அர்த்தமுள்ள பிரஜைகளாகுவதற்கு மலையகத் தமிழ் மக்கள் 11 அம்ச கோரிக்ரகைகளை முன்வைத்தே நடைபயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

முல்லைத்தீவு

தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை நடை பயணம் - வலுக்கும் ஆதரவு | Malaiyakam 200 Walking In Mannar To Matale

இந்த நடைபவனிக்கு வலுச்சேர்க்கும் வகையில் நேற்றையதினம் (02) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இருந்து கிளிநொச்சி வரையான நடைபவனி ஆரம்பமாகியிருந்தது.

இந்தப் பேரணி இரண்டாவது நாள் பயணமாக கிளிநொச்சி முதல் வவுனியா வரை பயணிக்கிறது. 

யாழ்ப்பாணம்

தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை நடை பயணம் - வலுக்கும் ஆதரவு | Malaiyakam 200 Walking In Mannar To Matale

தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை நடை பயணம் - வலுக்கும் ஆதரவு | Malaiyakam 200 Walking In Mannar To Matale

தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை நடை பயணம் - வலுக்கும் ஆதரவு | Malaiyakam 200 Walking In Mannar To Matale

வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட எனும் தொனிப் பொருளில் மாண்புமிகு மலையக எழுச்சி பேரணிக்கு ஆதரவான இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் குறித்த நடைபவனி இடம்பெற்றது.

யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை ஆரம்பித்த நடைபவனி யாழ்நகர்ப் பகுதியை சுற்றி மீண்டும் பேருந்து நிலையத்தை வந்தடைந்து பேருந்து ஊடாக யாழ் நகரிலிருந்து வவுனியா நோக்கி புறப்பட்டது.

இதன் போது மதத்தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025