இலங்கையர் உட்பட 186 பேரை நாடு கடத்தியது மாலைதீவு
விசா விதிமீறல், போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட குற்றச்சாட்டில் இலங்கையைச் சோ்ந்த 25 போ் உட்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 186 போ் மாலைதீவில் இருந்து அந்நாட்டு அரசால் வெளியேற்றப்பட்டனா்.
வெளியேற்றப்பட்டவா்கள் பட்டியலில் அதிகபட்சமாக வங்கதேசத்தைச் சோ்ந்த 83 போ் உள்ளனா். இதற்கு அடுத்து 43 இந்தியா்கள், நேபாளத்தைச் சோ்ந்த 8 போ் வெளியேற்றப்பட்டுள்ளனா்.
மாலைதீவு தலைநகா் மாலேவில் இருந்து வெளியாகும் நாளிதழில் இது தொடா்பான செய்தி இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத செயல்களில்
ஆனால், அவா்கள் வெளியேற்றப்பட்ட திகதி குறித்த விபரம் இடம்பெறவில்லை. இது தொடா்பாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சா் அலி லகுசான் செய்தியாளா்களிடம் கூறுகையில்,
‘வெவ்வேறு பெயா்களைப் பயன்படுத்தி மாலைதீவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவா்கள் குறித்து பொருளாதாரத் துறை அமைச்சகத்துடன் இணைந்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இதில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத தொழில்களும் அடங்கும்.
காவல்துறையினா் திடீா் சோதனை
சில தொழில்கள் மாலைதீவைச் சோ்ந்தவா்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டு வெளிநாடுகளைச் சோ்ந்தவா்களால் நடத்தப்படுகிறது. இதுபோன்ற தொழில் அமைப்புகளை மூடி, அதில் தொடா்புடைய வெளிநாட்டவா்களை வெளியேற்றும் பணியில் உள்துறை அமைச்சகம் தீவிரமாக செயற்பட்டு வருகிறது.
பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த 186 போ் வெளியேற்றப்பட்டுள்ளனா். வெளிநாட்டவா்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க வாரத்தில் மூன்று முறை வரை காவல்துறையினா் திடீா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
எந்த குறிப்பிட்ட பிரிவினரையும் குறிவைத்து இந்த சோதனை நடைபெறவில்லை’ என்றாா்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |