அடங்காத மாலைதீவு: இந்தியாவிடம் சரணடைந்த முன்னாள் அமைச்சர்
China
India
Maldives
World
By Dilakshan
இந்திய மூவர்ணக் கொடியை அவமதிக்கும் விதமாக பதிவிட்ட மாலைதீவு முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
அதையடுத்து, இந்தியாவை சேர்ந்த நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், தனது செயலுக்கு முன்னாள் அமைச்சர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
மாலைதீவுக்கு அதிபராக முகமது முய்சு பதவியேற்றதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
பெரும் சர்ச்சை
மாலைதீவு அதிபர் முய்சு சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவர் என்பதால் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே தொடர்ந்து அவர் மேற்கொண்டு வந்தார்.
அத்தோடு, மாலைதீவு அமைச்சர்கள் இந்தியப் பிரதமர் மோடி விமர்சித்து பேசியதும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
இந்நிலையில், மீண்டும் மாலைதீவு முன்னாள் அமைச்சர் ஒருவரின் இந்த செயல் பேசு பொருளாக மாறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி