தொடருந்து சமிக்ஞையில் ஏற்பட்ட கோளாறு: போக்குவரத்து பாதிப்பு
தொடருந்தின் சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மலையக தொடருந்து பாதையின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று (24) காலை முதல் குறித்த பாதையானது கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
தொடருந்து பாதையில் மண், கற்கள் மற்றும் மரங்கள் விழுந்துள்ளதால் தாமதமான நிலை ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
சமிக்ஞை அமைப்பில் தடை
இதல்கஸ்ஹின்ன (idalgashinna), ஒஹிய (Ohiya), அம்பேவெல (Ambewela) மற்றும் பட்டிபொல தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை அமைப்பு தடைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, கொழும்பு (Colombo) – பதுளை மற்றும் பதுளை (Badulla)– கொழும்பு ஆகிய பிரதேசங்களுக்கிடையிலான இரவு நேர அஞ்சல் தொடருந்தை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்றைய விசேட தொடருந்து சேவையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
