மும்பை அணிக்கு எதிரான மதீஷவின் வெளிப்பாடு: பதிவொன்றை வெளியிட்டு பாராட்டிய லசித் மாலிங்க
மத்திஷ பத்திரனவின்(Matheesha Pathirana) திறமையினை பாராட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க(Lasith Malinga) தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக நேற்று (14) இடம்பெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
அந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய மத்திஷ பத்திரன 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் மதீஷவின் திறமையினை பாராட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர் லசித் மாலிங்க தனது எக்ஸ் தளத்தில் இன்று(15) ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அணி
குறித்த பதிவில் அவர், நேற்றைய மதீஷவின் வெளிப்பாடு எங்களுக்கு எதிராகச் செய்தாலும் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும் மத்திஷ தனது கட்டுப்பாடு, கோடு மற்றும் நீளத்தை கணிசமாக திட்டமிட்டுக் கொண்டுள்ளதாகவும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உலகக் கிண்ணத்திற்கு வழிவகுக்கும் அவரது ஃபார்ம் இலங்கை அணிக்கு முக்கியமானதாக இருக்குமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |