80 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் இளைஞன் கைது
அஹுங்கல்ல, கல்பொக்க பகுதியில் சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் குறித்த போதைப்பொருளை வீடொன்றிலிருந்து மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்வதற்கு தயாரான வேளையிலேயே கைது செய்யப்பட்டதாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம்(16.08.2026) இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞர் என தெரிவிக்கபட்டுள்ளது.
80 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள்
சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் கடத்துவதற்குத் தயார்படுத்தப்பட்டிருந்த 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 204 கிராம் 660 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர் (17.08.2026) பலபிட்டிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.