யாழில் 32 வயது நபரால் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
யாழில் (Jaffna) சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் யாழ். நெடுந்தீவிலுள்ள 15 வயது சிறுமி ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “குறித்த சிறுமி ஐந்து மாதங்கள் கர்ப்பமாகிய நிலையில் நேற்றையதினம் (13) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு (Teaching Hospital Jaffna) அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
விசாரணைகள்
இதுகுறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர், குறித்த சிறுமியை பல தடவைகள் தகாதமுறைக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
