லண்டனில் மர்ம நபர் ஒருவர் நடத்திய கத்திக் குத்து தாக்குதல்: சிறுவன் பலி,பலர் காயம்
                                    
                    London
                
                                                
                    United Kingdom
                
                                                
                    Crime
                
                        
        
            
                
                By Laksi
            
            
                
                
            
        
    லண்டனில் மர்ம நபரால் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் காவல்துறை அதிகாரிகள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவமானது இன்று (30) காலை லண்டனில் உள்ள சுரங்க தொடருந்து நிலையத்திற்கு அருகே இடம்பெற்றுள்ளது.
இதன்போது,36 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினரின் விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மனரீதியில் பாதிக்கப்பட்டவர் என காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இச்சம்பவத்தை அடுத்து Ilford இல் உள்ள சுரங்க தொடருந்து நிலையம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்