பெருந்தோகை டீசல் கையிருப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது!
Sri Lanka
Petrol diesel price
Arrest
By Abi
நாட்டில் நிலவிவரும் எரிப்பொருள் சிக்கலின் மத்தியில் வரக்காபொல - மஹேனா பகுதியில் அனுமதியின்றி அதிகளவு டீசலை சேமித்து வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை வரக்காபொல காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கேகாலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த டீசல் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்போது உரிய அனுமதிப்பத்திரம் இன்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,235 லீற்றர் டீசல் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
46 வயதுடைய நபர் கைது
இந்தசம்பவம் தொடர்பில் தோலங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்