கட்டுநாயக்க சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை பயணி
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (18.04.2026) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு, கைது செய்யப்பட்டவர் கண்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய வர்த்தகர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்க அதிகாரிகளால் சோதனை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று அதிகாலை 01.05 மணியளவில் துபாயிலிருந்து 'flydubai' நிறுவனத்திற்குச் சொந்தமான FZ-569 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போதே, சந்தேகநபர் கொண்டு வந்த 02 பயணப் பொதிகளும் சுங்க அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 55 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய இலத்திரனியல் வெளிநாட்டு சிகரெட்டுகள் 35,400 (177 கார்ட்டூன்கள்), 110 இலத்திரனியல் சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |