ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடியவரை ஒருமணிநேரத்தில் பிடித்த விசேட அதிரடிப்படை
இலங்கைக்கு வருகை தந்த மூன்று ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வெளிநாட்டுப் பணப்பையைத் திருடிய நபரை அறுகம்பே காவல்துறை விசேட அதிரடிப்படையினர் ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை (31) ரஷ்யாவிலிருந்து வருகை தந்த தந்தை மற்றும் அவரது இரு மகள்கள் அறுகம்பே, குடகல்ல கடற்கரைக்கு அருகிலுள்ள விடுதியொன்றில் தங்கியுள்ளனர்.
விசேட அதிரடிப்படைக்கு தகவல்
அவர்கள் தம்முடைய பயணப்பைகளை அறையில் வைத்துவிட்டு கடலில் குளிக்கச் சென்ற வேளையில், அங்கிருந்த நபர் ஒருவர் 3,200 அமெரிக்க டொலர்கள் மற்றும் 1,620 யூரோக்கள் அடங்கிய பணப்பையைத் திருடிச் சென்றுள்ளார்.

சந்தேகநபர் பணப்பையைத் திருடி தப்பிச் செல்வதைக் கண்ட கடற்கரையிலிருந்த ஒருவர், உடனடியாக அறுகம்பே காவல்துறை விசேட அதிரடிப்படை முகாமுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
ஒருமணிநேரத்திற்குள் கைது
அதற்கமையச் செயற்பட்ட அறுகம்பே விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விரைந்து செயற்பட்டு சம்பவம் இடம்பெற்ற ஒரு மணி நேரத்திற்குள் திருடப்பட்ட பணத்துடன் சந்தேகநபரை பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டுப் பணமும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொத்துவில் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொத்துவில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்