மட்டக்களப்பில் சந்தேகநபர் ஒருவர் துப்பாக்கியுடன் அதிரடி கைது!
Batticaloa
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Bavan
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் சட்டவிரோத உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று(07) ஞாயிற்றுக்கிழழை இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று இரவு வெல்லாவெளி காவல்துறை பிரிவிலுள்ள திக்கோடை சுவரணையடி பிரதேசத்தில் வீடு ஒன்றை சுற்றிவளைத்து சோதனையிட்டபோது இந்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதில் கைது செய்யப்பட்டவரை இன்று(08) திங்கட்கிழமை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 17 மணி நேரம் முன்
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்