நாமலை சந்திக்க விரைந்த முக்கிய அரசியல்வாதிகள்
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மொட்டுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் நலம் குறித்து விசாரிக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சிறைச்சாலைக்கு சென்றுள்ளாக தெரிவிவக்கப்பட்டுள்ளது.
இன்று காலை (07.09.2026) நாமல் ராஜபக்சவின் நலம் குறித்து விசாரிப்பதற்காக, அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ச சிறை வளாகத்திற்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில் மேலும் சில அரசியல்வாதிகள் நாமலை சந்திக்க மெகசின்க்கு சென்றுள்ளனர்.
நாமல் ராஜபக்ச
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவின் நலன் குறித்து விசாரிப்பதற்காக அவர் மெகசின் சிறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேவர்தனவும் மெகசின் சிறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று முன் தினம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் நாமல் ராஜபக்சவை நேரில் சென்று சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |