நாமலை சந்திக்க சிறைச்சாலைக்கு சென்றார் ஷிரந்தி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தாயாருமான ஷிரந்தி ராஜபக்ச சற்று முன் வெலிக்கடை சிறைக்கு சென்றுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகன் நாமல் ராஜபக்சவின் நலன் குறித்து விசாரிப்பதற்காக அவர் வெலிக்கடை சிறைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 4ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய நாமல் ராஜபக்ச, விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டார்.
நலம் விசாரிப்பு
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களைக் கொள்முதல் செய்தது தொடர்பாக 800,000 அமெரிக்க டாலர்கள் இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதனை தொடர்ந்து, கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில், அவரை 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இதற்கமைய, அவர் மெகசின் சிறைச்சாலையில் அதிதீவிர பாதுகாப்பு கொண்ட விசேட அறையில் காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், தனது மகனை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிறைச்சாலைக்கு சென்றிருந்த வேளை, இன்று நாமலின் தாயான ஷிரந்தி ராஜபக்ச அவரை சந்தித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |