தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்து: காவல்துறை விசாரணை
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த சொகுசு காரொன்று வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று (07.09.2026) காலை தொடங்கொட 32.4 கிலோமீட்டர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காரில் பயணித்த பெண் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நெடுஞ்சாலை சாலை விபத்து
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று மீண்டும் மாத்தறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது, பராமரிப்புப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த வீதித் தடுப்புகளில் மோதி, தொடர்ந்து முன்னோக்கிச் சென்று வீதியின் நடுவிலிருந்த பாதுகாப்பு வேலியுடன் மோதி இந்த விபத்து நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தினால் அதிவேக நெடுஞ்சாலையின் நடுவிலுள்ள பாதுகாப்பு வேலிக்கும் வீதித் தடுப்புகளுக்கும் மற்றும் காரிற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22