அவசர சிகிச்சைப் பிரிவில் சுரேஷ் சலே! கொழும்பு வைத்தியசாலையில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
புதிய இணைப்பு
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, அவசர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வைத்தியசாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, சுரேஷ் சலேயின் பாதுகாப்பிற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்றும், காவல்துறைவிசேட அதிரடிப்படையின் பல குழுக்களும் வைத்தியசாலைக்குள்ளும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர், மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, அவசர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சற்று நேரத்திற்கு முன்பு அவர் தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
உண்ணாவிரத போராட்டம்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், இதுவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தார்.

தன்னை மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்வதாகக் கூறி, அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குள்ளும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியிருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |