சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் கைது
கிரிபத்கொடை காவல் பிரிவிற்குட்பட்ட ஈரியவெட்டிய பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் (Walana Central Anti-Corruption Unit) கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினருக்கு நேற்று (25.08.2026) கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 75 லீற்றர் (100 போத்தல்கள்) எடையுடைய சட்டவிரோத மதுபானம் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
சட்டவிரோத மது
காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மதுபானம் மேலதிக நடவடிக்கைகளுக்காகக் கிரிபத்கொடை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காவல்துறை விசாரணையின்படி கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹுனுப்பிட்டிய, வத்தளை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவராவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பாகக் கிரிபத்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 10