தியவன்ன ஓயாவில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்
Sri Lanka Police
Sri Lanka Parliament
Sri Lanka Police Investigation
By Sathangani
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு (Parliament of Sri Lanka) அருகிலுள்ள தியவன்ன ஓயாவில் (Diyawanna Lake) மிதந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று (20) காலை மீட்கப்பட்டுள்ளதாக தலங்கமை காவல்துறையினர் தெரிவித்தனர்.
தியவன்ன - ஜப்பான் நட்புறவு வீதியில் உடற்பயிற்சி பாதைக்கு அருகில் நபரொருவர் இந்த சடலத்தை கண்டுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
பின்னர் இது குறித்து தலங்கம காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 60 அல்லது 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்