கிங் கங்கையில் மீட்க்கப்பட்ட ஆணின் சடலம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Accident
Death
By Thulsi
கிங் கங்கையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சடலம் நேற்று (23) மாலை போத்தல காவல்துறை பிரிவுக்குட்பட்ட வக்வெல்ல பாலத்திற்கு அருகில் கிங் கங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை.
மேலதிக விசாரணை
ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக போத்தல காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது ஒரு சந்தேகத்திற்கிடமான மரணம் என்பது இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் தொடர்பான நீதவான் விசாரணைக்குப் பின்னர், பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
மேலும் போத்தல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 6 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்