யாழில் பேருந்தில் இருந்து கீழே விழுந்தவருக்கு நேர்ந்த கதி...!
யாழில் பேருந்தில் இருந்து கீழே விழுந்த சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கருப்பையா சிவகுமார் (வயது 35) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், அநுராதபுரத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
மிதிபலகை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று (08) காலை அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் வந்துள்ளார்.
இதன்போது செம்மணிப் பகுதியில் வந்துகொண்டிருந்த நிலையில் பேருந்தின் மிதிபலகையில் நின்றவாறு முகம் கழுவ முயற்சித்துள்ளார்.
மரண விசாரணை
இதையடுத்து, பேருந்து செம்மணி வளைவில் திரும்பும் போது கீழே விழுந்து மயக்கமுற்றுள்ளார்.
பின்பு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (08) உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |