மாத்தளை காவல் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்த நபர் உயிரிழப்பு
மாத்தளை காவல் நிலையத்தின் சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று (20.11.2026) அதிகாலை உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதிகாலை 12.45 மணியளவில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாத்தளை காவல்துறையினர்
உயிரிழந்த நபர் கண்டி, அம்பிட்டிய, திலேனகம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் நேற்று (19) மாத்தளை ஹித்கொல்ல பகுதியில் வைத்து 3,010 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |