பாலத்தின் கீழ் விழுந்து காணாமல் போனவர் சடலமாக மீட்பு
புதிய இணைப்பு
A-35 வீதியில் இந்திய இராணுவத்தின் உதவியுடன் புனரமைக்கப்பட்ட பாலத்தின் கீழ் பகுதியில் விழுந்து காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாடு மேய்ப்பதற்காக சென்ற நபர் ஒருவர் நேற்று (27) மாலை காணமல் போன நிலையில் மக்களின் தீவிர தேடுதலில் அவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்கள் ச.தவசீலன்
முதலாம் இணைப்பு
பரந்தன் – முல்லைத்தீவு A-35 வீதியில் அமைந்துள்ள பாலத்தின் கீழ்பகுதியில் ஒருவர் தவறி விழுந்துள்ளார்.
இந்திய இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட குறித்த பாலத்தின் கீழ் பகுதியில் மாடு மேய்ப்பதற்காக சென்ற ஒருவரே இவ்வாறு தவறி விழுந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (27) பிற்பகல் 4.00 மணியளவில் நடந்துள்ளது.
நடவடிக்கைகள்
விபத்தில் சிக்கிய நபரை கண்டறியும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |