மருத்துவ வரலாற்றில் புதிய உச்சம்! மனிதனுக்கு பன்றி இதயம் பொருத்தி சாதனை (காணொளி)

America Human Tissue Pig Bartley Griffith
By Chanakyan Jan 11, 2022 10:49 AM GMT
Report

வைத்தியத்துறை வரலாற்றில் முதன்முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றி இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதருக்கு பொருத்தி அமெரிக்கா வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பென்னட் (வயது - 57) என்ற நபரிற்கே இவ்வாறு இதயம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவரே பன்றி இதயம் பொருத்தப்பட்ட உலகின் முதல் நபர் ஆவார்.

இது தொடர்பில் தெரியவருகையில்,

டேவிட் பென்னடிற்கு உயிரை காப்பாற்ற அவருக்கு மாற்று இதயம் பொருத்த வேண்டியிருந்தது. ஆனால் மருத்துவ காரணங்களால், மனித இதயம் பொருத்தப்படுவதற்கு அவர் தகுதியற்றவராக இருந்தார்.

இதன் காரணமாக அவரைக் காப்பாற்ற இறுதி முயற்சியாக அவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை பொருத்த வைத்தியர்கள் முடிவு செய்தனர். இதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், புத்தாண்டின் போது அனுமதியளித்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமையன்று அறுவை சிகிச்சை மூலம் வைத்தியர்கள் பன்றியின் இதயத்தை பொருத்தியுள்ளனர். தற்போது வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இவரிற்கு பொருத்தப்பட்ட இதயம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் உடலிலிருந்து எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பன்றியின் உறுப்புகளை மனித உடம்பு ஏற்காமல் போவதற்கு காரணமாக இருக்கும் மூன்று மரபணுக்களை பன்றியின் உடலிலிருந்து வைத்தியர்கள் நீக்கியுள்ளனர்.

பன்றியின் இதய திசுவை (Heart Tissue) தேவைக்கு மேல் வளர செய்யும் மரபணுவையும் மருத்துவர்கள் நீக்கியுள்ளதோடு, பன்றியின் உறுப்பை மனித உடல் ஏற்பதற்காக, ஆறு மனித மரபணுக்களை பன்றியின் உடலில் செலுத்திய பின்னர் குறித்த பன்றியின் இதயத்தினை அவருக்கு பொருத்தியுள்ளனர்.

கடந்தாண்டு அமெரிக்காவில், மூளை சாவடைந்த ஒருவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி சாதித்திருந்தனர்.

தற்போது அதே நாட்டை சேர்ந்த வைத்தியர்கள் ஒருபடி மேலே சென்று, சுயநினைவுடன் இருக்கும் மனிதனுக்கு பன்றியின் இதயத்தை பொருத்தியுள்ளனர்.

மனிதனுக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது வெற்றியடைந்தால், அது மனித உடல் உறுப்புக்களுக்கான தட்டுப்பாட்டை போக்கும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் அறுவை சிகிச்சை நிபுணர் பார்ட்லி க்ரிபித் (Bartley Griffith) தெரிவிக்கையில், 

மாற்று உறுப்பு பற்றாக்குறை நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இதுபோன்ற சாதனைகள் பயன்படும். அமெரிக்காவில் ஒரு நாளைக்கு 17 பேர் மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார்கள், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

தேவையை பூர்த்தி செய்ய விலங்கு உறுப்புகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு நீண்ட காலமாக கருதப்படுகிறது, மேலும் பன்றி இதய வால்வுகளைப் பயன்படுத்துவது ஏற்கனவே பொதுவானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025