முற்றிய குடும்பத் தகராறு - கொடூரமாக கொல்லப்பட்ட நபர்
வீடு ஒன்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (28) இரவு கம்பளை - கீரபனை பகுதியில் இடம்பெற்றுள்ளது
இவ்வாறு உயிரிழந்தவர் கீரபனை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபராவார்.
சந்தேகநபர் கைது
இந்த படுகொலை தொடர்பில் கம்பளை காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.

பின்னர் காயமடைந்த நபர் உடனடியாக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபருக்கும் அவரது சகோதரியின் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில், சகோதரியின் மகன் மன்னாக் கத்தியால் தாக்கி இக்கொலையைச் செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
43 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கம்பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |