அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்த இரகசிய தகவல் : யாழில் சிக்கிய முக்கிய சூத்திரதாரி
Jaffna
Sri Lanka Police Investigation
Arrest
By Erimalai
யாழ்ப்பாணம் துன்னாலை காட்டுப்பகுதியில் பல வருடங்களாக சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவரை நெல்லியடி காவல்துறையினர் சுற்றிவளைத்து கைதுசெய்துள்ளனர்.
தப்பி ஓடிய மற்றைய சந்தேக நபர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் நெல்லியடி காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள்
இச் சுற்றிவளைப்பில் 50000 ml கசிப்பு, மற்றும் 780,000 கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நெல்லியடி அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், தடைய பொருட்களும் பருத்திதுறை நீதிமன்றில் ஒப்படைத்து சட்ட நடவடிக்கைகளுக்கு முன்வைக்கவுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்