19 வயது காதலி கொலை - காவல்துறையில் சரணடைந்த காதலன்: தெரியவந்த பின்னணி!
தனது காதலியை கத்தியால் தாக்கி கொலை செய்த 21 வயது இளைஞன் வென்னப்புவ காவல்துறையில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வென்னப்புவ - வாய்க்கால் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (19) மாலை இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர், வாய்க்கால் பிரதேசத்தில் வசித்து வந்த 19 வயதுடைய யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காதல் உறவு
அதன்படி, குறித்த யுவதி சந்தேகநபரான 21 வயது இளைஞனுடன் ஒரு வருடத்திற்கும் மேலாக காதல் உறவில் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறனாதொரு பின்னணியில், காதல் உறவை முறித்துக் கொள்ள யுவதி பரிந்துரைத்துள்ள நிலையில், இருவரும் அவர்கள் வீட்டில் சந்தித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அதன்போது, இருவரஇருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்தது, இதன் விளைவாக சந்தேகநபர் யுவதியை கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பானமேலதிக விசாரணைகளை வென்னப்புவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்