வீடொன்றில் இரத்தக் கறைகளுடன் சடலம் மீட்பு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Death
By Thulsi
வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கம்பஹா காவல்துறை பிரிவிற்குட்பட்ட கட்டுகஸ்தர பகுதியில் நேற்று வியாழக்கிழமை (23) குறித்த சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
கம்பஹா காவல்நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
உடற்கூற்றுப் பரிசோதனை
உயிரிழந்தவர் கட்டுகஸ்தர பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சடலத்துக்கு அருகில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீதவான் பரிசோதனைகளின் பின்னர், சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், நபரின் மரணம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்