உடுவிலில் 36 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
By Vanan
யாழ்ப்பாணம் - உடுவிலில் 36 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து சுன்னாகம் ஆலடி பகுதியில் சுன்னாகம் காவல்துறையினருடன் இணைந்து நடாத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 29 வயதுடைய நபர் ஒருவரிடம் இருந்து 36 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்தோடு அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் சுன்னாகம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு குறித்த நபர் நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையிலும் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி