தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளின் முகாமைத்துவம்
நாட்டிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளின் தினசரி செயற்பாடுகள் மற்றும் முகாமைத்துவம் இன்று (01) முதல் முறையான முகாமைத்துவ உடன்படிக்கையின் கீழ் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தனியார் துறையினர் இணைந்து சட்ட மற்றும் நிதி சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்பட்டது.
அதன் பின்னர், சம்பந்தப்பட்ட அனைத்து சொத்துக்களும் 6 மாதங்களுக்குள் அவர்களுக்கு மாற்றப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பந்துல குணவர்தனவினால் சமர்ப்பிக்கப்பட்ட
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவினால் கடந்த 25 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பு, அதிவேக நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஊழியர்களை வர்த்தக ரீதியாக நிர்வகிக்கும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையை பிரித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |