முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனின் இணைப்புச் செயலாளராக பணியாற்றிய சம்பத் மனம்பேரி : வெளிவரும் பகீர் தகவல்கள்
Parliament of Sri Lanka
Johnston Fernando
Ananda Wijepala
By Sumithiran
ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்களில் சேர்ந்து ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிறிலங்கா பொதுஜன பெரமுன பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுடன்(johnston fernando) இணைந்து செயல்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால(ananda wijepala) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சம்பத் மனம்பேரி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் இணைப்புச் செயலாளராகப் பதவி வகித்ததாக அமைச்சர் கூறினார்.
கட்சியில் உள்ள பலருடன் நெருங்கிய தொடர்பு
மேலதிகமாக, கட்சியில் உள்ள பலருடன் அவர் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவது இப்போது தெரிய வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
