ஈஸ்டர் தாக்குதல் எச்சரிக்கையை புறக்கணித்த புலனாய்வாளர்கள்! அம்பலப்படுத்திய நாமல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எச்சரிக்கையை புறக்கணித்த அதே இரண்டு புலனாய்வு அதிகாரிகள் போதைப்பொருள் கொள்கலன்கள் தொடர்பான தகவல்களையும் புறக்கணித்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முன்கூட்டிய தகவல்
ஈரானில் இருந்து வந்த இரு கொள்கலன்களில் போதைப்பொருள் இருப்பதாக முன்னதாகவே தகவல் கிடைத்திருந்தபோதும், சுங்கத் திணைக்களம் அவற்றை விடுவித்ததாகவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 323 சிவப்பு லேபிள் கொண்ட கொள்கலன்களை வெளியேற்றப்பட்டதையும் நினைவூட்டிய அவர், அது இதுவரை எந்த விசாரணையும் நடக்காதது கவலையளிப்பதாகவும் கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
அதன்போது, மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த அதிகாரிகளே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய தகவல்களையும் புறக்கணித்தவர்கள். அந்தத் தாக்குதலுக்குப் பொறுப்புடைய சிலர் கண்டறியப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இரு முன்னாள் காவல்துறை மா அதிபர்கள் சிறையிலேயே உள்ளனர். ஆனால், இன்றைய அரசாங்கம் அந்தத் தவறுகளை செய்த அதிகாரிகளையே உயர் பதவிகளில் நியமித்துள்ளது” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
